Tuesday, November 26, 2019

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே!

புலவர் வெற்றியழகன்
தலைவர்,
தொல்காப்பியர் தமிழ்ச் சங்கம்,
சென்னை.
தமிழ் ஓர் உயர்வான மொழி!
அதனால்அதன் சொல்லும் உயர்வே!

உலகில் இப்பொழுதுள்ள மூவாயிரம் மொழிகளுக்கும் இல்லாத சிறப்புக் கூறுகள் தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு.

தமிழ் ஓர் இயற்கை மொழி!
தமிழ் ஓர் அறிவியல் மொழி!
தமிழ் ஓர் உடற்கூறியல் மொழி!

தமிழ் ஓர் இயற்கை மொழி!

இயற்கை மொழிஎன்பதில் இரு கூறுகள் உண்டு. ஒன்று இயற்கையாகத் தோன்றியமொழி. ஆம்; இதற்கு முன்பு வேறு மொழி இல்லை. மாந்தன் தோன்றி அவன் பேசிய மொழி தமிழ் மொழிதான். அவன் உருவாக்கியஅதாவதுபாமரன் உருவாக்கியமொழி. சான்றோர் செதுக்கியது; வளர்த்து; பெருக்கியது. கா-கா என்று கத்தியதனைக் கொண்டு காக்கா என்றான். கிளிக் என்று கிளத்துவதனால் கிளி என்றான். வாத்வாத் என்றதனைக் கொண்டு வாத்து என்றான். கூ-என்றதனைக் கொண்டு குயில் என்றான். தவ்விச் சொற்தனைக் கண்டான் தவளை என்றான். இவையும் மற்றவையும் இயற்கையாக உருவாக்கப்பட்ட சொல்லேஉயர்வான தமிழ்ச் சொல்லாகும்.

இயற்கையாக வாயில் வருவது

இயற்கை மொழி என்பதற்கு வேறு ஒரு சான்று; நமது வாயில் எவ்வாறு ஒலிக்கின்றதோ அதனை வைத்துக்கொண்டே அதற்கு இலக்கணம் வகுத்துள்ளனர் சான்றோர். இவ்வாறு எழுதுதல் வேண்டும்; இவ்வாறு பேசுதல் வேண்டும் என்று தமிழ்மொழியில் இலக்கணம் இல்லவே இல்லை. வேறு மொழியில் குறிப்பாக ஆங்கிலத்தில் முதலில் இலக்கணம் கூறப்பெறுகிறது; அதன்படியே எழுப்பெறுகிறதுபேப்பெறுகிறது.
கெடுதல் விகாரம்

WALKED என்று எழுதுதல் வேண்டும். அதனைவாக்குஎன்று ஒலித்தல் வேண்டும் என்று கூறிவிடுகின்றனர். அதனால் வால்க்டு என்று எழுதுகின்றனர்; வாக்டு என்று ஒலிக்கின்றனர். இதனைப் போன்ற இடர்ப்பாடு இனிய தமிழ் மொழிக்கு இல்லவே இல்லை.

மணம் + நாள் = மணநாள் என்றும்
முகம் + மூடி = முகமூடி என்றும்
மரம் + வேர் = மரவேர் என்றும்நின்ற சொல்லுக்கும் வந்த சொல்லுக்கும் இடையிலிருந்த ம்தானாகவே நமது வாயில் ஒலிப்பதில்லை; ஒலிக்காது.

மணம் + நாள் என்று சொல்லும்பொழுது இடையில் மகர மெய்யை ஒலிக்காதீர் என்று சொல்லாமலேயே நமது வாய் விட்டுவிட்டே ஒலிக்கின்றது. நின்ற சொல்லின் இறுதியில் ம்இருந்து வரும் சொல்லின் முதலெழுத்து நகரக் குடும்ப எழுத்துகளும்; மகரக் குடும்ப எழுத்துகளும்; வகரக் குடும்ப எழுத்துகளும் என்று மைந்திருந்தால் மகரம் தானாகவே போய்விடும்; நாமாக அதனைப் போக்க வேண்டிய தேவையில்லை. இதற்குக் கெடுதல் விகாரம் என்று இலக்கணம் கூறுகின்றனர். கெடுதல் விகாரம் என்பது தன்வினை; தானாக நிகழ்வது; நாமாக வலிந்து மாற்றுவதில்லை. பிறவினையாக அமைவதாக இருந்தால்கெடுத்தல் விகாரம்என்று பெயர் சூட்டியிருப்பர்.

திரிதல் விகாரம்திரித்தல்இல்லை

திரிதல் விகாரம் என்பது நின்ற சொல்லின் இறுதியிலுள்ள மெய்யெழுத்து வேறொரு மெய்யெழுத்தாற் திரிவது திரிதல் விகாரம்
பல் + பொடி = பற்பொடி
பொன் + சட்டி = பொற்சட்டி என்று நம்வாய் தானாகவே ஒலிக்கிறதுதானாகவே திரிக்கின்றது. அதனால்தான் இதற்கும் திரித்தல் விகாரம் என்று பிறவினையில் பெயர் மைக்காமல்தன் வினையில்திரிதல் விகாரம் என்று பெயர் சூட்டியுள்ளனர் நம் முன்னோர்.


தோன்றல் விகாரம்தோற்றுவித்தல் இல்லை.

தோன்றல் விகாரம் என்றால்நின்ற சொல்லில் இல்லாத ஓர் எழுத்து-வருஞ்சொல்லிலும் இல்லாத ஓர் எழுத்து இடையில் தோன்றுதலாகும். பூ + கொடி = பூங்கொடி என்று நமது வாய் தானாகவே இடையில்ங் எழுத்தை இட்டு ஒலிக்கின்றது.

மிகுதல் என்பதுமிகுத்தல் இல்லை

மிகுதல் என்பது நின்ற சொல்லுக்கும் வந்த சொல்லுக்கும் இடையில் ஒரு மெய்யெழுத்து மிகுதலாகும்.

வாழை + காய் = வாழைக்காய்
வாழை + க்கை = வாழைச் சக்கை
வாழை + தண்டு = வாழைத் தண்டு
வாழை + பழம் = வாழைப் பழம்என்றுஇவற்றில் க், ச், த், ப் மிகுந்திருக்கின்றன. மிகுதல் என்றால் ஏற்கெனவே இருந்தால்தான் மிகும். கா-வில் உள்ள க், -வில் உள்ள ச், -வில் உள்ள த், -வில் உள்ள ப் மிகுந்திருக்கின்றன. இவற்றை உமது வாயால் ஒலித்துப் பார்ப்பீராக. இடையில் மிகுதல் இல்லாமல் ஒலிக்கவே முடியாது.

வகர உடம்படுமெய்யகர உடம்படுமெய் (அறிவியல்)

உடம்படு மெய்யென்பதும் நமது வாயில் தானாகவே நிகழும். திரு+அண்ணாமலை = திருவண்ணாமலை என்று வகர உடம்படு மெய்யாகத்தான் ஒலிக்கும். காரணம்-அறிவியல் மொழி; நமது தாய் மொழி என்பதுவே.
திரு-ர் + . ர்மெய்யெழுத்து, உயிரெழுத்துஉடம்பின் மீதுஓர் உயிர் . இணைந்துவிட்டது. அண்ணாமலையில் உள்ள -வை இரண்டாவது உயிரை ஏற்றுக் கொள்ளாமல்வ்என்னும் மெய்யைத் தோற்றுவித்து அதன்மீதுவந்த இணைந்து திருவண்ணாமலை என்று ஒலிக்கின்றது.


யகர உடம்படுமெய்: நின்ற சொல்லின் இறுதியில் , , இம்மூன்று எழுத்து இருந்துவரும் சொல்லின் முதலெழுத்து எந்த உயிராக இருந்தாலும் யகர உடம்படுமெய்தான் தோன்றும்.
எடுத்துக்காட்டு கிளி + அழகு = கிளியழகு; தீ + ரிந்து = தீயெரிந்தது; தை + அழகு = தையழகு. இவை அறிவியலுக்கும் உடற்கூறியலுக்கும் சான்றாகும்.

வாயில் வருவதே தமிழ்

கதை + கேட்டான் = கதை கேட்டான். மிகவில்லை நமது வாயில். இதற்கு இலக்கணம்இரண்டாம் வேற்றுமைத் தொகை மிகாது என்கிறது.
கதையை + கேட்டான் = கதையைக் கேட்டான். நமது வாயில் மிகுகின்றது. இதற்கு-இரண்டாம் வேற்றுமை விரியில் மிகும் என்கிறது இலக்கணம். நமது வாயில் வருவதுதான் தமிழ்; அதற்குதான் இலக்கணம் வகுத்துள்ளனர். வாயும்தமிழும்இலக்கணமும் ஒன்று; ஒன்றை விட்டு ஒன்றைப் பிரிக்கவே முடியாது.

தமிழ் ஓர் இயற்கை மொழி!
தமிழ் ஓர் அறிவியல் மொழி!
தமிழ் நம் வாயின்மொழி!

2 comments:

  1. மிகவில்விலை நமது வாயில்.

    மிகவில்லை நமது வாயில் என்றிருக்க வேண்டும்

    ReplyDelete
  2. புரிந்து கொள்வதற்கு ஏற்ற, எளிமையான பதிவு ஐயா.. நன்றி..

    ReplyDelete